தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் முன்னணி நடிகராக திகழும் சிலம்பரசன் (சிம்பு) அளித்த பழைய ஜெயா டிவி பேட்டி தற்போது இணையத்தில் மீண்டும் டிரெண்டாகி வருகிறது. பல சர்ச்சைகள், விமர்சனங்கள் மற்றும் இடைவேளைகளுக்குப் பிறகும் மீண்டும் திரையுலகில் வெற்றிகரமாக கம்பேக் கொடுத்த காலத்தில் அளித்த இந்த நேர்காணலை ரசிகர்கள் புதிதாய் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த பேட்டியில், தன் சினிமா பயணத்தை நினைவுகூர்ந்த சிம்பு, “சினிமாவுக்குள் எப்படி வந்தேன் எனக்கே தெரியவில்லை. அப்பா எப்போதும் சினிமாவைப் பற்றியே பேசுவார். அம்மா நான் நன்றாக படிக்க வேண்டும் என்று விரும்பினர். இருவரிடமும் நிறைய அடிகள் வாங்கியது உண்மை,” என பகிர்ந்துள்ளார். பெண்களிடம் பேசுவதையும் தன் அம்மா கடுமையாகக் கட்டுப்படுத்தியதாகவும்,
“படப்பிடிப்பு தளத்திலே கூட எந்த பெண்ணிடமும் அமர்ந்து பேசவில்லை. ஒரு பெண்ணோடு பேசினாலும் அம்மாவிடமிருந்து பெல்ட் அடி விழும்,” என கூறியுள்ளார்.
View this post on Instagram
காதல் குறித்து பேசும்போது, “காதல் அழகானது. பல முறை ஏமாற்றமும் தோல்வியும் கண்டேன். என்னை காதல் ஏமாற்றவில்லை, நான் காதலித்தவர்கள்தான் ஏமாற்றினர். அதுவே என்னை பக்குவமாக்கியது,” என சிம்பு குறிப்பிட்டுள்ளார். நயன்தாராவுடன் தொடர்புடைய லீக்கான புகைப்படத்தைப் பற்றி, “அது ஒரு தனிப்பட்ட தருணத்தில் கேசுவலாக எடுக்கப்பட்ட படம். அது வெளியானது என்னை வருத்தியது,” எனக் கூறியுள்ளார். படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படமாக கூட இருக்கலாம். ஆனால் அது எப்படி வெளியே வந்தது என்பது எனக்கு தெரியவில்லை அந்த போட்டோ வந்தபோது நான் மிகவும் வருத்தப்பட்டேன் என்றார்.
பாலியல் கல்வி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சிம்பு,
“அது குழந்தைகளுக்கு அவசியமானது. ஒரு குழந்தை தவறாக எவரையும் தொடாது என்ற நம்பிக்கை ஒவ்வொரு பெற்றோரும் வழங்க வேண்டும். என்னை பற்றி எதுவும் சொல்லலாம், ஆனால் நான் ஒரு பெண்ணையும் விருப்பமின்றி தொட்டது இல்லை,” என உறுதியாகச் சொன்னார்.
மேலும் இந்த நேர்காணல் பகிரப்பட்டவுடன், சிம்புவின் திறம்பட்ட பேச்சு மற்றும் தன் வாழ்க்கையைப் பற்றிய வெளிப்படையான கருத்துக்கள் ரசிகர்களிடையே மீண்டும் விவாதத்தை உருவாக்கியுள்ளன. வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
