தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்தபோது போட்டியாளராக நுழைந்தவர் ஜூலி. இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்களால் அறியப்பட்ட நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சி விட்டு வெளியே வந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஜூலி நடிக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் தற்போது ஜூலி தனக்கு நிச்சயதார்த்தமானதாகவும் அது தொடர்பான புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அவரது வருங்கால கணவனின் புகைப்படத்தை மட்டும் மறைத்துள்ளார்.
அதன்பிறகு ஜூலி தனது கேப்ஷனில் இந்த உலகை அழகானதாக மற்றும் ஆண் மீது பைத்தியமாக இருப்பதாக குறிப்பிட்டார். அதோடு தான் மன நிறைவாக இருப்பதாகவும் கூறினார். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் ஜூலியின் வருங்கால கணவன் யார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக பலரும் இருக்கிறார்கள்.
