பீகார் மாநிலம் நவாடா (Nawada) மாவட்டத்தைச் சேர்ந்த ஒருத் திருமண மண்டபத்தில், மணமகனின் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்த போது, மணமகன் தலைப்பாகை அணிந்து சற்றும் சலனமில்லாமல், தனதுக் கைப்பேசியில் ‘ஃப்ரீ ஃபயர்’ (Free Fire) என்ற வீடியோ கேமை விளையாடிக் கொண்டிருந்தார்.

சடங்குகள் ஒருபுறம் நடக்க, மணமகன் தனதுக் கவனம் முழுவதும் மொபைல் ஸ்கிரீனிலேயே வைத்திருந்தார். அவரது இந்தச் செயலால் அருகில் இருந்த மணமகள் வெட்கத்தில் தலைக்குனிந்துக் காணப்பட்டார்.

 

View this post on Instagram

 

A post shared by ABP News (@abpnewstv)

இந்த வீடியோவை எடுத்தப் பலர் சமூக ஊடகங்களில்ப் பகிர்ந்து, “இந்தக் காலத்தில் விளையாட்டுப் பக்தி வழிபாட்டை விட முக்கியமா?” என்று கிண்டல் செய்து வருகின்றனர். இந்தச் செயல் ‘கேமிங் அடிமைத்தனத்தின்’ (Gaming Addiction) ஒரு எடுத்துக்காட்டாகப் பார்க்கப்படுகிறது.