திருமணங்கள் என்றால், அங்கே நகைச்சுவையான சம்பவங்களுக்குப் பஞ்சமிருக்காது. அத்தகைய பல திருமண வீடியோக்கள் வைரலாகி நம்மைச் சிரிக்க வைப்பதுண்டு. குடும்ப உறுப்பினர்களும் சில சமயம் சிரிப்புக்கு காரணமாக அமைவார்கள். சமீபத்தில், ஒரு திருமண வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பலரும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வைரலானது. இந்தச் சம்பவம் எப்போது, எங்கே நடந்தது என்பது வீடியோவில் தெளிவாகத் தெரியவில்லை.
View this post on Instagram
இந்த வைரல் வீடியோவில், ஒரு திருமண ஊர்வலம் நடைபெறுகிறது. மாப்பிள்ளையின் நண்பர்கள் சாலையில் நடனமாடுகின்றனர். அதேபோல, முகத்திரை அணிந்த சில பெண்களும் உற்சாகமாக நடனமாடுகின்றனர். அவர்கள் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருக்கும்போதே, பொதுச் சாலையில் வைக்கப்பட்டிருந்த பீர் பாட்டில்களை எடுத்துக்கொள்கின்றனர். முகத்திரைக்குப் பின்னால் பீர் பாட்டிலை வைத்துக்கொண்டு உறிஞ்சிக் குடிக்கின்றனர்.
அதன் பிறகு, அருகில் இருப்பவர்களுக்கு அந்தப் பாட்டில்களைக் கொடுக்கின்றனர். மற்ற பெண்களும் முகத்திரையை விலக்காமலேயே பீர் அருந்தும் காட்சி பதிவாகியுள்ளது. பீர் அருந்திய பின்னர், மீண்டும் ஆட்டம் தொடர்கிறது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டு, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், லைக்ஸ் மற்றும் கருத்துக்களையும் குவித்து வருகிறது. பல நெட்டிசன்கள் வீடியோவிற்கு வேடிக்கையான கருத்துக்களைப் பதிவிட்டுள்ள நிலையில், ஒருவர் “பீர் குடியுங்கள்! ஆட்டம் கலக்கும்!” என்று வியப்புடன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
