இண்டிகோ விமானத்தில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரீல்ஸ்-காக எடுக்கப்பட்ட இந்த நிகழ்வு ஆன்லைனில் பரவியதுடன், பயணியின் நடத்தை மீது நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளனர். அந்த வீடியோவில், ஒரு விமானப் பணிப்பெண் பயணியிடம் ஒரு கிளாஸ் தண்ணீரைக் கொடுத்ததை காணலாம். ஆனால் வழக்கம்போல் குடிப்பதற்குப் பதிலாக, அந்த பயணி தண்ணீரை தன் உள்ளங்கையில் ஊற்றி, அதையே வாயில் கொண்டு குடிக்கிறார். இந்த செயல் விமானப் பணிப்பெண்ணை சங்கடப்படுத்தும் வகையில் இருந்ததாக காட்சிகள் தெரிவிக்கின்றன.

 

 

View this post on Instagram

 

A post shared by Amardeep Singh (@amardeepsingh1591)

இந்த நிகழ்வை, அவருடன் இருந்த நண்பர்கள் படம்பிடித்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளனர். நெட்டிசன்கள், கேபின் குழுவினரை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட பயணியை கடுமையாக விமர்சித்துள்ளனர். அடிப்படை மரியாதை மற்றும் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறும் சமூக வலைதள உள்ளடக்கத்திற்காக இப்படியான செயலில் ஈடுபடுவது ஏற்க முடியாதது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

“பாவம் விமானப் பணிப்பெண்… எத்தனை விதமான மக்களை சமாளிக்க வேண்டி இருக்கிறது,” என்று ஒருவர் கருத்து பதிவு செய்துள்ளார். மேலும் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.