பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தொடங்கிய பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், தொடங்கிய இரண்டே நாட்களில் எதிர்க்கட்சிகளின் அமளியால் செயலிழந்த நிலையில், நேற்று வெளியான ஒரு வீடியோ இணையத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
SIR குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரிய எதிர்க்கட்சித் தரப்பினர் இரு அவைகளிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்ற செயல்பாடுகள் முடங்கியுள்ளன.
When your boss needs a quick recharge !
A light moment between Rahul Gandhi and Mallikarjun Kharge.#RahulGandhi #Mallikarjun_kharge #Congress #Parliament @kharge @INCIndia pic.twitter.com/Wjz1J2zCHb
— Himanshu Purohit (@Himanshu_UK13) December 3, 2025
இந்நிலையில், ராஜ்யசபா நடைமுறைகளின் போது தோள்பட்டை வலியால் அவதிப்பட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் தோளில், அருகில் இருந்த ராகுல் காந்தி கை வைத்து நிம்மதி பெற உதவிய காட்சி, பாராளுமன்றக் கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி, பல்வேறு அரசியல் வாதங்களைத் தூண்டி வருகிறது.
