தமிழக வெற்றிக் கழகத்தின்  தலைவர் விஜய், வரும் டிசம்பர் 5-ஆம் தேதி புதுச்சேரியில் நடத்தத் திட்டமிட்டிருந்த ‘ரோடு ஷோ’வுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து, புதுச்சேரி சபாநாயகர் செல்வம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

காவல்துறை அனுமதி மறுப்பது நல்லது என்றும், கூட்ட நெரிசலால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, விஜய் தனியாக மைதானம் போன்ற இடத்தில் கூட்டம் நடத்திக்கொள்ளலாம் என்றும் சபாநாயகர் செல்வம் பேட்டி அளித்துள்ளார்.

“>

 

கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தைக் கருத்தில் கொண்டே புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், சபாநாயகர் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.