தமிழகத்தில் இன்றும் அதிதீவிர கன மழைக்கான ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதாவது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரைகளிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. சுமார் மூன்று கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்த தாழ்வு மண்டலம் இரவு நேரத்தில் சென்னை அருகே வரும் என்பதால் நாளையும் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. இந்த நிலையில் டிட்வா புயல் காரணமாக இதுவரை தமிழ்நாட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன் பிறகு மாநிலம் முழுவதும் 582 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும், 1601 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. மேலும் 85,521.76 ஹெக்டேர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.