ஒரு இந்திய ஊழியர் தனது பாட்டி ஐ.சி.யு-வில் (ICU) அனுமதிக்கப்பட்டதால், அவசர வேலையாக அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், அலுவலகத்தின் இயக்குநர் (Director) ஒருவர், இரவு 9 மணிக்கு நடந்த ஒரு வழக்கமானக் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளாததற்குக் கோபமடைந்து, அவரது ஒரு நாள் சம்பளத்தைக் குறைக்க (Deduct Salary) மனிதவளத் துறைக்கு (HR) உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, நிறுவனங்களின் மனிதநேயமற்றச் செயல்பாடு (Insensitivity) குறித்துப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Director asked HR to deduct a day’s salary because I was not available for a meeting
byu/Fit_Werewolf_4231 inIndianWorkplace

அவசரமாக வெளியேறியபோது மேலதிகாரியிடம் தகவல் தெரிவிக்க மறந்ததால், ஊழியர் மருத்துவமனையில் இருந்தபோதே நிறுவன இயக்குநர் தொலைபேசியில் சத்தம் போட்டுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஊழியருக்கு, சில நாட்களுக்குப் பிறகு 16.5 மணி நேரம் நீண்ட ஷிஃப்ட்டில் வேலை பார்க்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் வெறுப்படைந்த அந்த ஊழியர், “இந்த 16.5 மணி நேர ஷிஃப்ட், நான் மிஸ் செய்த நாளுக்கு ஈடு செய்யாது என்றால், இனிமேல் எந்தச் சூழ்நிலையிலும் ஷிஃப்ட்டுக்கு மேல் ஒரு நிமிடம் கூட வேலை செய்ய மாட்டேன்” என்று மேலாண்மைக்குத் துணிச்சலாக மின்னஞ்சல் (Email) அனுப்பியுள்ளார்.

இதற்குப் பல இணையவாசிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். “சரியான பதிலடி, எல்லாத் தகவல்தொடர்புகளையும் எழுத்துப்பூர்வமாகவே வையுங்கள்” என்று பலர் அந்த ஊழியரைப் பாராட்டியுள்ளனர்.