உத்தரப் பிரதேசத்தின் மஹோபா (Mahoba) நகரில், சில நாட்களாகத் தங்களுக்குத் தொடர்ந்துத் தொல்லை கொடுத்து வந்த ஒரு இளைஞரை, இரண்டு கல்லூரி மாணவிகள் ஒன்று சேர்ந்துச் சாலையின் நடுவே வைத்து லாடம் மற்றும் செருப்பால் கடுமையாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மஹோபா நகரின் ராம்கதா மார்க் (Ramkatha Marg) பகுதியில், திங்கள்கிழமை மதியம் இரண்டு மாணவிகள் திடீரென ஒரு இளைஞரை மடக்கிப் பிடித்துத் தாக்கத் தொடங்கினர்.
महोबा में दो छात्राओं ने अपने पीछा करने वाले शोहदे को सड़क पर लात-घूंसे और चप्पलों से पीटकर सबक सिखाया। घटना का वीडियो सोशल मीडिया पर वायरल हो गया है, जबकि पुलिस अब छात्राओं से पूछताछ कर मामले की जांच कर रही है। #mahoba pic.twitter.com/5YwD62YYy7
— Pawan Kumar Sharma (@pawanks1997) December 1, 2025
அங்கிருந்த பொதுமக்கள் இதைப் வேடிக்கை பார்த்தபடியே வீடியோ எடுத்தனர். தாக்கப்பட்ட இளைஞர் ஒருவழியாகத் தப்பித்து ஓடினார். தாக்கிய மாணவிகள், “இந்த இளைஞர் பல நாட்களாகத் தொல்லை கொடுத்து வந்தார். சுமார் 15 நாட்களாகப் பொறுத்துப் பார்த்தோம்.
இன்று கோச்சிங் (Coaching) வகுப்புக்குச் சென்றபோது மீண்டும் அவர் மோசமாக நடந்துகொண்டதால், அவருக்குப் பாடம் புகட்டினோம்” என்று தெரிவித்தனர்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள், வைரல் வீடியோவைக் கவனத்தில் கொண்டு, மாணவிகளிடம் விசாரித்து, புகார் அளிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றுத் தெரிவித்துள்ளனர்.
