தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் குளோ ட்ரையன், தனது நீண்ட நாள் காதலியான மிஷெல் நட்வெல்லை திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். நவம்பர் 29 அன்று, ட்ரையன் தனது காதலிக்கு முழங்காலிட்டு நிச்சயதார்த்தம் செய்தபோது எடுத்தப் புகைப்படங்களைச் சமூக வலைதளத்தில் வெளியிட்டு, “எங்கள் வாழ்வின் இறுதி வரை ஒன்றாக” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

31 வயதான குளோ ட்ரையன், தென்னாப்பிரிக்க அணிக்காக 3 டெஸ்ட், 124 ஒருநாள் மற்றும் 113 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். சமீபத்தில் நடந்த ஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குச் சென்ற தென்னாப்பிரிக்க அணியில் இவரும் இடம்பெற்றிருந்தார். ஒருநாள் போட்டிகளில் 2292 ரன்களும், 62 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். குளோ ட்ரையனின் வருங்கால மனைவியான மிஷெல் நட்வெல் குறித்துப் பேசியுள்ள ட்ரையன், மிஷெல் ஒரு நடன அமைப்பாளர் மற்றும் இயக்குநர் என்று தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Coco (@chloetryon25)

மேலும், இவர் வீடியோகிராஃபராகவும் உள்ளார். சமூக வலைதளங்களில், மிஷெல் நட்வெல், டிக்டாக்கில் 1 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்களையும், இன்ஸ்டாகிராமில் 50,000-க்கும் அதிகமான ஃபாலோயர்களையும் கொண்டுள்ளார். சமீபத்தில் நடந்த ஐ.சி.சி. மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தென்னாப்பிரிக்கா அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்த நிலையில், இந்த மகிழ்ச்சியான நிச்சயதார்த்தச் செய்தி வெளியாகி உள்ளது.