சமூக வலைத்தளங்களில் ஒரு சின்னஞ்சிறு குழந்தையின் அப்பாவித்தனமான செயல்பாடு குறித்த வீடியோ ஒன்று வைரலாகி, பார்ப்போரை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. அந்தச் சிறுமியின் மாசுமருவற்ற செயல்களைப் பார்த்த பலரும், ‘இதைத்தான் பண்பு என்று சொல்வது’ என்று பாராட்டி வருகின்றனர்.
அந்த வைரல் வீடியோவில், தாய், தந்தையருடன் கடைவீதிக்கு (Mall) வந்த அந்தச் சிறுமி, கடையில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த ‘டமி’ (Dummy) பொம்மைகளைப் பார்க்கிறாள்.
View this post on Instagram
அந்தப் பொம்மைகளைச் சாதாரண மனிதர்கள் என்று தவறுதலாக நினைத்து, வீட்டிலுள்ளப் பெரியவர்களின் கால்களைத் தொட்டுக் கும்பிடுவது போல, அவள் ஒவ்வொரு பொம்மையின் கால்களையும் ஓடிச் சென்று பணிவுடன் தொட்டுக் கும்பிடுகிறாள்.
இந்தக் குழந்தையின் அப்பாவித்தனமான செயலால் ஆச்சரியமடைந்த அவளதுப் பெற்றோர்கள், அந்தக் காட்சியை உடனடியாகப் பதிவு செய்துள்ளனர்.
“இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு அழகானப் பண்பு” என்று பலர் அந்தக் குழந்தையைப் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
