சீனாவின் ஹென்ஹான் மாகாணத்தைச் சேர்ந்த மா என்ற மூதாட்டி, தனக்குப் பாசத்துடன் துணையாக இருக்க ஒரு “புதிய மகளை” ஆன்லைனில் தேடுகிறார். அவருக்கு இரண்டு மகள்கள் இருந்தும் ஆதரவு இல்லை. ஆஸ்துமா நோயால் அவதிப்படும் இவர், தன்னைப் பராமரிக்க வருபவருக்குத் தன் அடுக்குமாடிக் குடியிருப்பையும், உடைமைகளையும், மேலும் மாதம் சுமார் ₹37,500 ஊதியமாகத் தருவதாக அறிவித்துள்ளார்.

​முதியோர் இல்லத்திற்குச் செல்ல விரும்பாத மா, தன்னைப் பார்த்துக்கொள்ள வருபவருடன் முறையான “ஆதரவு ஒப்பந்தம்” (Legacy Support Agreement) போடத் தயாராக உள்ளார். பேத்தியை வளர்ப்பதில் ஏற்பட்ட சண்டையால் மூத்த மகள் விலகிவிட்டார். இந்தச் சம்பவம், சீனாவில் வேகமாக அதிகரித்து வரும் முதியோர்களின் தனிமைப் பிரச்சனையைப் பிரதிபலிக்கிறது. சட்டப்படி மகள்கள் ஆதரவளிக்கக் கடமைப்பட்டிருந்தாலும், மா தனது தனிமையை நீக்க இந்த அசாதாரண முடிவை எடுத்துள்ளார்.