சமூக வலைதளங்களில் தற்போது ஒரு இந்தியத் திருமண வீடியோ வைரலாகி வருகிறது. இதில், ஒரு மணமகன் புகைப்படம் எடுக்கும்போது குறுக்கிட்ட குழந்தைகளையும் உறவினர்களையும் கோபமாகத் திட்டுவது பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் வேகமாகப் பரவி, ஆன்லைனில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழாவின் கொண்டாட்டங்களை விட போட்டோஷூட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததற்காக மணமகனின் நடவடிக்கையை பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். அந்த வீடியோவில், மணமகனும் மணமகளும் சோபாவில் அமர்ந்திருக்க, அவர்கள் மீது பணம் தூவப்படும் ஒரு புகைப்படக் காட்சிக்குத் தயாராகிறது.

“>

அப்போது எதிர்பாராத விதமாக ஒரு குழந்தை மேடைக்கு ஓடி வந்து, படப்பிடிப்பைத் தடுக்கிறது. இதனால் கோபமடைந்த மணமகன், குழந்தையை விரட்டும் முயற்சியில் அதன் தலையில் தட்டி விடுகிறார்.

பின்னர், மேடையில் இருந்து விருந்தினர்களைப் பார்த்துப் பேசிய அவர் உங்கள் குழந்தைகளை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.  படப்பிடிப்பைக் கெடுக்காதீர்கள் என்று கூறுகிறார்.

பணம் மற்றும் படப்பிடிப்பைக் குறிப்பிட்ட இந்தக் கருத்து நெட்டிசன்களிடம் கடுமையான எதிர்ப்பைப் பெற்றது. திருமணங்கள் என்பது குடும்ப நிகழ்ச்சிகள் என்றும், குழந்தைகள் அதில் அலைந்து திரிவது இயல்பு என்றும், போட்டோஷூட்டிற்காக இப்படி கோபப்படுவது தவறான முன்னுரிமையைக் காட்டுகிறது என்றும் பலர் கருத்து தெரிவித்தனர்.

திருமணம் என்பது புகைப்படங்களுக்கானது அல்ல, அது ஒரு புனிதமான விழா,” என்றும், “விருந்தினர்களை மதிக்க முடியாதவர்கள் அவர்களை அழைக்கக் கூடாது” என்றும் நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.