தெலங்கானா மாநிலத்தில் ஒரு வீட்டுவசதித் திட்டத்தின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடச் சென்றபோது, அந்த இடத்தின் அடித்தளம் (Basement) திடீரெனச் சரிந்து விபத்து ஏற்பட்டது.
இதில் தெலங்கானா மாநில சட்டமன்ற உறுப்பினர் (MLA) மற்றும் மாவட்ட ஆட்சியர் (Collector) ஆகியோர் அதிர்ஷ்டவசமாகப் பெரிய காயங்கள் இன்றித் தப்பித்தனர்.
MLA inspection అనగానే structural stability itself gave resignation 😂
ఇది ఇందిరమ్మ ఇళ్ల పరిస్థితి 👇 pic.twitter.com/WKZiAZwzYt
— Arachaka Hastham (@ArachakaHastham) November 25, 2025
இந்தச் சம்பவம் குறித்து வெளியான வீடியோ, அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களுக்குக் கீழே இருந்த நிலத்தடிப் பகுதி (Basement) திடீரெனச் சரிந்து, உள்ளே இருந்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஆட்சியர் உட்படப் பலரும் மண்குவியலுக்குள் விழுந்ததைக் காட்டுகிறது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கட்டுமானப் பணிகளின் தரமற்ற தன்மை காரணமாகத்தான் இதுபோன்ற விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அரசு அதிகாரிகளுக்கே இந்தக் கதி என்றால், பொதுமக்களுக்கான கட்டுமானத் திட்டங்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
