வகுப்பறைக்கு வரும் மாணவர்கள் வழக்கமாக ஸ்டீல் அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களில் மதிய உணவு கொண்டு வரும் நிலையில், ஒரு மாணவன் ஐபோன் பாக்ஸில் லஞ்ச் எடுத்து வந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
வகுப்பறையில் ஆசிரியை, ஒரு மாணவன் கையில் வைத்திருந்த ‘ஆப்பிள் ஐபோன்’ பாக்ஸைக் கவனித்து, “இதற்குள் என்ன இருக்கிறது?” என்று கேட்டார். அதற்கு அந்த மாணவன் சற்றும் பதட்டமின்றி, “இது என்னுடைய லஞ்ச்” என்று பதிலளித்தான். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை, “என்னது லஞ்சா? திறந்து காட்டு” என்று கேட்டிருக்கிறார். வகுப்பறையில் இருந்த மற்ற மாணவர்களும் ஆவலுடன் அந்த பாக்ஸை எட்டிப் பார்த்தனர்.
Achar Lana bhul gya Earbuds mai 😂😂😂😂 pic.twitter.com/LS6xEM3R0L
— Harry (@hariom5sharma) November 25, 2025
“>
ஆசிரியை சொன்னதைக் கேட்டு அந்த மாணவன் ஐபோன் பாக்ஸைத் திறந்தபோது, உள்ளே மொபைல் போனுக்குப் பதிலாக, சப்பாத்திகள் பேப்பரில் மடித்து வைக்கப்பட்டிருந்தன. இதைப் பார்த்த ஆசிரியை, “இதை யார் உனக்குப் பேக் செய்து கொடுத்தது? இது பார்ப்பதற்குக் கொஞ்சம் கூடச் சாப்பாட்டு டப்பா மாதிரியா இருக்கிறது?” என்று கிண்டலாகக் கேட்க, “இதை நான் தான் பேக் செய்தேன்” என்று அந்த மாணவன் பதிலளித்தான்.
இந்த வேடிக்கையான வீடியோ இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.
