தமிழகத்தில் அரசுப் பேருந்துகளின் இயக்கம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் நோக்கில், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் (Drivers) மற்றும் நடத்துநர்கள் (Conductors) தங்களது பணிநேரத்தின் போது செல்போன் பேசுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் மிகக் கடுமையான அதிரடி அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்துப் பயன்பாடுகள் மற்றும் பேருந்து நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் தமிழன் பார்த்திபன் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, பேருந்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் பேசிய அமைச்சர், பேருந்தை இயக்கும் போதோ அல்லது பணிநேரத்தில் இருக்கும் போதோ கவனச்சிதறலை ஏற்படுத்தும் வகையில் மொபைல் போன்களைப் பயன்படுத்துவது பயணிகளின் உயிருக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என்பதால், எக்காரணத்தைக் கொண்டும் போன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி அமைச்சர் தமிழன் பார்த்திபன் நேடியாகக் களமிறங்கி எடுத்துள்ள இந்த அதிரடி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தற்பொழுது நெட்டிசன்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்று சமூக வலைத்தளங்களில் அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
