கர்நாடகத்தில் பேருந்து பயணத்தின் போது ஏற்பட்ட தகராறு தற்போது சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையாகி வருகிறது. பேருந்தில் பயணம் செய்த ஒரு பெண், டிக்கெட் நடத்துனருடன் ஏற்பட்ட மோதலில், அவரது காலரைப் பிடித்து இழுத்துக்கொள்வது போன்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
அந்தப் பெண் துமகூருக்கு இலவச டிக்கெட்டை பெற்றிருந்தார். ஆனால் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் நடுவே இறங்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், பயணிக்கும் இடத்துக்கு ஏற்ப டிக்கெட் பெற வேண்டிய அவசியத்தை நடத்துனர் விளக்கியுள்ளார். இலவச டிக்கெட் என்றாலும், விதிமுறைகளுக்கு புறம்பாக நடுவே இறங்க முடியாது என்பதை அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதில் கடுப்படைந்த அந்தப் பெண், நடத்துனரின் காலரைப் பிடித்து தகராறில் ஈடுபட்டதாக வீடியோவில் காணப்படுகிறது. இதனை சமூக ஊடக பயனர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் இலவச டிக்கெட் வசதியை தவறாக பயன்படுத்தியதாகவும், பெண்கள் அதிகாரமளித்தலை தவறாக பொருள் படுத்துவதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ”
In Karnataka, a female passenger purchased a ticket to Tumakuru but attempted to get down at Srirangapatna. The conductor tried to confront her but instead she grabbed him by his collar and told him that she is an Empowered Woman and Rules are not for herpic.twitter.com/9hQ90Zs3Vb
— NCMIndia Council For Men Affairs (@NCMIndiaa) November 24, 2025
