சமூக வலைத்தளங்களில் ஒரு வித்தியாசமான வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு புகைப்படக் கலைஞர் 2000 அடி உயரத்தில் அதிவேகத்தில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தின் திறந்த கதவின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்தச் சாகசத்தின்போது அவரது முகத்தின் தோல் (Skin) காற்றில் அடித்துச் செல்லப்படுவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. விமானம் மிக வேகமாகப் பறக்கும்போது, 2000 அடி உயரத்தில் உள்ள அதிவேகக் காற்று மற்றும் அழுத்தத்தால் (Air Pressure and Velocity), அந்தப் புகைப்படக் கலைஞரின் கன்னங்கள் துணி போலப் பின்னோக்கி அடிக்கப்பட்டு, அலைகள் போல அசைவதை வீடியோ தெளிவாகக் காட்டுகிறது.
“कोई भी काम आसान नहीं होता है” 😱
लगभग 2000ft की ऊंचाई पर एयरक्राफ्ट मिसाइल की तरह उड़ रहा है।
एयरक्राफ्ट का दरवाजा खोल कर अपने कैमरे में कुछ कैद करना चाहता है फोटोग्राफर
फोटोग्राफर को हवा सिर्फ छूती नहीं है उसके चेहरे से टकराती है, जिससे उसकी स्किन में लहरें उठती हैं, उसकी… pic.twitter.com/7OQVfHjTiU
— वीरू यादव (@VeerooYada39822) November 22, 2025
அதைக் கண்ட பயனர்கள், “அது முகமா அல்லது துணியா?” என்று ஆச்சரியத்துடன் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சாகசத்தைக் கண்ட நெட்டிசன்கள், இவ்வளவு அதிக வேகத்தில் மற்றும் உயரத்தில் நின்று புகைப்படம் எடுக்கும்போது ஏற்படும் அபாயம் குறித்துத் தங்களது அதிர்ச்சியையும் விமர்சனங்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
