தென் மாவட்டங்களில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
இதன் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தென்காசி மற்றும் திருநெல்வேலி (நெல்லை) மாவட்டங்களில் நாளை (நவம்பர் 24) ஒருநாள் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மேலும், நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
