தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், இன்று (நவ. 23) காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ‘மக்கள் சந்திப்பு’ நிகழ்ச்சியில் பேசுகையில், ஆளும் கட்சியான திமுகவைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் தவெகவுக்கு ஆதரவாகப் பேசியதைச் சுட்டிக்காட்டினார்.
“தவெகவினரைத் தற்குறிகள் என்று சொல்லாதீர்கள் என அவர் (திமுக எம்.எல்.ஏ.) நமக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்” என்று விஜய் தெரிவித்தார். மேலும் “நம் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான அஞ்சலையம்மாள் என்பவரின் சொந்தக்காரர்” என்று கூறியது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. திமுக எம்.எல்.ஏ. ஒருவரே தவெகவினருக்கு ஆதரவாகப் பேசியிருப்பது, விஜயின் அரசியல் பயணத்துக்குக் கிடைத்த புதிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ. எழிலன் என்பவரே அண்மையில் அவ்வாறு பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது, “.
