தமிழக  வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், இன்று (நவ. 23) காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசும்போது, தவெகவினரை விமர்சிப்பவர்களுக்குத் தடாலடியாகப் பதிலடி கொடுத்தார். “நாங்கள் தற்குறிகள் இல்லை, தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வந்துள்ள ஆச்சரியக்குறிகள்” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தவெகவினரை ‘தற்குறிகள்’ என்று கூறியதாகக் குறிப்பிட்டு, அதுகுறித்துப் பேசினார். “ஒவ்வொரு வீட்டிலும் நமக்கு ஆதரவு பெருகும். கூடிய விரைவில், திமுகவினர் ‘ஏன்டா விஜய்யைத் தொட்டோம், விஜய்யுடன் இருப்பவர்களை தொட்டோம்’ என்று வருந்தும் நிலை வரும்” என்றும் விஜய் சூளுரைத்தார். விஜயின் இந்த ஆவேசப் பேச்சு, ஆளும் கட்சிக்கு எதிரான நேரடிச் சவாலாகப் பார்க்கப்படுகிறது.