தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் இன்று (நவ. 23) காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, அங்குத் திரளாக மக்கள் வருகை தந்தனர்.
கரூர் பொதுக்கூட்ட நெரிசல் சம்பவம் காரணமாக, இந்த நிகழ்வானது முழுக்க முழுக்க உள் அரங்கில், 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாட்டுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மக்களைச் சந்தித்தபோது, அங்கு குழந்தைகளுடன் வந்திருந்த பெண்களை அவர் கூட்டிச் சென்றார்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தப் பெண்களை நிறுத்திய புஸ்ஸி ஆனந்த், “குழந்தைகளை ஏன் கூட்டிக் கொண்டு வந்தீர்கள்?” என்று கண்டிப்புடன் கேள்வி எழுப்பினார். மேலும், நெரிசல் மற்றும் கூட்டத்தின் கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, குழந்தைகளுடன் வந்த பெண்களுக்கான அனுமதியையும் அவர் மறுத்துவிட்டார்.
#Vijay | தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்வில்..#TVK | #TVKVijay pic.twitter.com/G4OgS9t7NM
— Senthilraja R (@SenthilraajaR) November 23, 2025
“>
கரூர் சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, குழந்தைகள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன், கட்சித் தலைமை இந்த உறுதியான நடவடிக்கையை எடுத்துள்ளது.
