புதுச்சேரி அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசனா, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக  வெற்றிக் கழகத்தில்  இணைந்துள்ளதாக இன்று (நவ. 21) தெரிவித்துள்ளார்.

முன்னாள் எம்.எல்.ஏ.வான அசனா, இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “இரண்டு நாட்களுக்கு முன்பே கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துவிட்டேன்” என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.


மேலும் பேசிய அவர், இன்று (நவ. 21) தனது பிறந்தநாள் என்பதால், கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு, இன்று முதல் தனது புதிய கட்சிப் பணிகளைத் தொடங்கி உள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அதிமுகவிலிருந்து விலகிய நிலையில், பாஸ்கர் போன்ற மற்றொரு முக்கியப் பிரமுகர் பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்தச் சூழலில், புதுச்சேரி அதிமுகவின் மற்றொரு முக்கிய முகமான அசனா நேரடியாகத் தவெகவில் இணைந்திருப்பது, அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.