தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை (நவ.17) கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியின் பகுதியான காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அளித்து புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். க

னமழை காரணமாகப் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், கனமழை காரணமாக விடுமுறை அறிவித்த முதல் மாவட்டமாக காரைக்கால் உள்ளது.

இதேபோல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்கும் நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் இன்றிரவு அல்லது நாளை அதிகாலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.