தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவையிலும் நாளை (நவ.17) கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதில், 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த மழையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (நவ.17) விடுமுறை அளிக்கப்படுமா அல்லது வழக்கம்போல் பள்ளிகள் செயல்படுமா என்பது குறித்த அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை அதிகாலையில் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.