சமூக ஊடகங்களில் தற்போது தனித்துவமான ஒரு வீடியோ வைரலாகப் பரவி, மக்களை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள தனிப்பட்ட அன்பையும், புரிதலையும் எடுத்துக்காட்டுகிறது. ஒரு நபர் அதிக குடிபோதையில் இருந்ததால், வீட்டிற்குச் செல்லும் வழியை மறந்து தள்ளாடியபடி அலைந்துள்ளார்.

 

அப்போது, அந்த நபரைத் தேடி வந்த அவருடைய செல்லப் பிராணியான காளை மாடு, அவரை மெதுவாகத் தன் மூக்கால் இடித்துத் தள்ளியபடி, “வாங்க, வீடு இந்த வழியாகத்தான் இருக்கிறது!” என்று சொல்வது போல, பாசத்துடன் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்ற காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ, மனிதர்களும் விலங்குகளும் கொண்டிருக்கும் உண்மையான பாசப் பிணைப்பைக் காண்பிப்பதால், இணையவாசிகள் பலரும் நெகிழ்ந்துபோய் கருத்து தெரிவித்து வருகின்றனர்.