வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களின் பொது நடத்தை குறித்து இணையத்தில் அவ்வப்போது விவாதங்கள் கிளம்புவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், லண்டன் நகரின் புகழ்பெற்ற தேம்ஸ் நதியில் (River Thames) ஒரு இந்தியர் தன் கால்களை அலம்பும் வீடியோ ஒன்று வெளியாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
View this post on Instagram
இந்த வீடியோவில், அந்த நபர் தன் கால்களை அலம்பியதோடு நிற்காமல், நதியிலேயே குளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் செயலைக் கண்ட பல பிரிட்டன் பயனர்கள், “இது ஒரு முக்கிய நகரத்தில் உள்ள சுற்றுலாப் பயணிக்குச் சற்றும் பொருந்தாத நடத்தை” என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.
அதேசமயம், மற்ற சில பயனர்கள், “அந்த நபருக்கு யாருக்கும் அவமரியாதை ஏற்படுத்தும் எண்ணம் இருக்காது, கலாச்சாரப் பழக்கங்களே இதற்குக் காரணமாக இருக்கலாம்” என்று வாதிடுகின்றனர்.
