நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சியில் இன்று (நவம்பர் 15) செய்தியாளர்களைச் சந்தித்தபோது, பீகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வி குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த சீமான், “பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதற்கு SIR-ம் ஒரு முக்கியக் காரணம்” என்று குற்றம் சாட்டினார்.

இதன் மூலம், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் (SIR) மூலமாகப் பாஜக ஆதாயம் அடைந்ததாக அவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இதே SIR பணிகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நிலையில், தற்போது சீமானும் இதே கருத்தை எதிரொலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.