​தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் (SIR பணிகள்) குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து புதிய காணொளியை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில், தமிழகத்தில் நடைபெற்று வரும் ‘SIR’ பணிகள் முடிவடைந்த பிறகு, வாக்காளர் பட்டியலில் நாம் இருக்கிறோமா இல்லையா என்பது யாருக்கும் தெரியாமல் போகும் அபாயம் உள்ளதாகவும், இதன் விளைவாக மாநிலத்தில் உள்ள யாரும் வாக்களிக்க முடியாத நிலை கூட வரலாம் என்றும் அவர் அஞ்சுகிறார்.

“>

 

மேலும், அவசர கதியில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள் காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாக்குரிமையை இழக்க நேரிடும் என்றும் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் உரிய கவனம் செலுத்தி, வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்