ஆந்திரப் பிரதேசம், கர்னூல் மாவட்டத்தில் ஒரு துயரமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஒருவர் புதிதாக வீடு கட்டியதைத் தொடர்ந்து, அங்குப் பணிபுரிந்த தொழிலாளர்களுக்காக மட்டன் குழம்புடன் (ஆட்டுக் கறி) விருந்து அளித்துள்ளார்.
அப்போது, விருந்தில் கலந்துகொண்ட 65 வயதான லக்ஷ்மனையா முதியவர்,மதுபோதையில் ஆட்டுக் கறியில் இருந்த ஒரு துண்டைக் கடித்து அவசரமாக விழுங்க முயன்றபோது, அது தொண்டையில் சிக்கிக் கொண்டது.
ஆட்டுக் கறித் துண்டு தொண்டையில் சிக்கியதால், அந்த முதியவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்துக் கர்னூல் மாவட்டப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருந்து மகிழ்ச்சியாக நடந்து முடிந்திருக்க வேண்டிய வேளையில், இந்த எதிர்பாராத விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
