பெங்களூருவில் உள்ள பிரபலமான பன்னேர்கட்டா தேசியப் பூங்காவில் (Bannerghatta National Park) நடந்த சஃபாரி (Safari) சுற்றுப்பயணத்தின் போது, சுற்றுலாப் பயணிகள் இருந்த பேருந்து மீது ஒரு சிறுத்தை (Leopard) திடீரெனப் பாய்ந்து தாக்கிய வீடியோ வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல் காரணமாகப் பேருந்தில் இருந்த ஒரு பெண் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. சஃபாரி என்றாலே அட்வென்ச்சராக இருந்தாலும், சில சமயங்களில் அது ஆபத்தாக மாறும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
बेंगलुरु के बन्नेरघट्टा नेशनल पार्क में सफारी बस पर तेंदुए ने किया हमला, चेन्नई की महिला यात्री हुई घायल…देखिए डरा देने वाला वीडियो! #Bengaluru #ViralVideo #Leopard #ABPNews pic.twitter.com/5vetFD0LJp
— ABP News (@ABPNews) November 13, 2025
சஃபாரி பேருந்து மெதுவாகச் சென்று கொண்டிருந்தபோது, வழிகாட்டி அருகில் உள்ள விலங்குகளைப் பயணிகளுக்குக் காட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரெனப் புதர்களுக்குள் இருந்து வெளிவந்த ஒரு சிறுத்தை, பேருந்தை நோக்கிப் பாய்ந்து, ஜன்னல் மீது தாவி ஏறியது.
சிறுத்தையின் இந்தத் திடீர் தாக்குதலைக் கண்ட பேருந்திலிருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோய், உரக்கக் கூச்சலிட்டனர்.
சிறுத்தை ஜன்னல் அருகே வந்து உள்ளே இருந்தவர்களை உற்றுப் பார்த்ததும், பயணிகள் பயத்தில் உறைந்துபோயினர். இந்தக் கோரமான சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் அதிவேகமாகப் பரவி வருகிறது.
