திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க.) கூட்டணி அமைப்பது குறித்துத் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

த.வெ.க.வுடன் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு அளிக்கப்படும் என்று விஜய் அறிவித்ததும், காங்கிரஸ் மேலிடத்துடன் அவருக்குள்ள நெருக்கமும் இந்தக் கூட்டணித் திட்டத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து ஆய்வு செய்ய, மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் மேலிடப் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் ஆகியோர் அடங்கிய 12 பேர் கொண்ட குழு ஒன்று தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் குழுவின் அறிக்கை, தமிழக காங்கிரஸின் எதிர்காலக் கூட்டணி முடிவில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.