சமூக வலைதளங்களில் ஒரு நபர், முதலை, தவளை, குரங்கு போன்ற பல்வேறு விலங்குகள் நடப்பதைப் போலவே தத்ரூபமாக நடித்துக் காட்டும் வீடியோ வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது. இது ஏதேனும் ‘செயற்கை நுண்ணறிவு’ வீடியோவா? என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு, அவரது கலைத்திறன் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
पहले मगरमच्छ बना… फिर बंदर! अब बस सुपरमैन बाकी है 😭
भाई ने पूरा नेशनल जियोग्राफिक अकेले शूट कर दिया 🤣 क्या पहले कभी देखें है,, pic.twitter.com/BXxxPjPIYB
— TANVEER (@mdtanveer87) November 9, 2025
43 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில், கடற்கரை போன்ற பகுதியில் அந்த நபர், தனது உடலை விசித்திரமாக வளைத்து, முதலை தரையில் ஊர்ந்து செல்வது போலவும், குரங்கு தாவிச் செல்வது போலவும், தவளை குதிப்பது போலவும் என மூன்று முதல் நான்கு விலங்குகளின் அசைவுகளைத் தத்ரூபமாக நடித்துக் காட்டுகிறார். இதை அங்கே கூடியிருந்த மக்கள் கூட்டம் ஆரவாரத்துடன் கண்டு களிக்கிறது. @mdtanveer87 என்ற ‘எக்ஸ்’ கணக்கில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவுக்கு, “முதலில் முதலையாக இருந்தார், பிறகு குரங்காக மாறினார்! இவர் ‘தேசிய புவியியல்’ சானலைத் தனியாகவே படமாக்கி விட்டாரா?” என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை இதுவரை 43 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். “உண்மையில், இந்த மனிதன் சாகசம் செய்பவர், இதைச் செய்வது எளிதல்ல, இவருக்கு ரப்பர் போன்ற உடல் உள்ளதாகத் தெரிகிறது” என்று ஒரு பயனர் பாராட்டியுள்ளார். மற்றொருவர், “முதலையிலிருந்து குரங்காக மாறியது பிரமாதம், இப்போது பறக்கும் முறைதான் பாக்கி, ‘சூப்பர்மேன்’ மோட் ஆன் ஆகப் போகிறது” என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த அரிய திறமை கொண்ட கலைஞருக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
