தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால், ஆளும் கட்சியான திமுகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டு மற்ற கட்சிகளின் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் தங்கள் பக்கம் இழுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டத்தில் அதிமுகவுக்குப் போட்டியாக இன்று திமுகவில் முக்கிய இணைப்புகள் நடந்துள்ளன.
மாநிலம் முன்னேற, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து, கரூர் ஊராட்சி ஒன்றியம், நெரூர் தென்பாகம், புதுப்பாளையம், அரங்கநாதன் பேட்டை, ஒத்தையூர் ஆகிய பகுதிளை சேர்ந்த அதிமுக மற்றும் மாற்றுக் கட்சியினர், இன்று தங்களை கழகத்தில் இணைத்துக்… pic.twitter.com/iYDY8QpFF3
— V.Senthilbalaji – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@V_Senthilbalaji) November 9, 2025
“>
கரூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம், ஒத்தையூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகினர். இவர்களுடன் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் தேமுதிகவைச் சேர்ந்த சில நிர்வாகிகளும் விலகினர்.
இவர்கள் அனைவரும் திமுகவின் முக்கிய நிர்வாகியான செந்தில் பாலாஜி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இதற்கு முந்தைய நாள், திமுக மாவட்ட நிர்வாகிகள் சிலர் அதிமுகவில் இணைந்த நிலையில், இந்த திடீர் இணைப்பானது கரூர் அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
