பொதுவாகவே, மருத்துவமனை என்றாலே குழந்தைகளுக்குப் பயம்தான்; குறிப்பாக ஊசி போடுகிறார்கள் என்றால் அழ ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு குறும்படத்தில், காலில் காயத்துடன் மருத்துவமனையில் படுத்திருக்கும் ஒரு சிறுவன், தனக்கு ஊசி போட வந்த அழகான பெண் மருத்துவரை ரசிக்கும் காட்சிகள் இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

அந்த இளம் மருத்துவர் ஊசி போடுவதற்காகச் சிறுவன் பக்கம் குனிகையில், சிறுவன் சிறிதும் பயமின்றி கண்ணிமைக்காமல் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். சிறுவனின் இந்த திடீர் ‘கியூட்’ பார்வையால் அந்தப் பெண் மருத்துவரும் ஒரு கணம் பரவசமாகி, அவனைப் பார்த்தபடியே ஊசியைப் போடுகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by death crowler (@death_crowler)

அந்தச் சிறுவன் அந்தப் பெண் மருத்துவரைப் பார்த்து வெட்கப்படுவதும், அவரிடமிருந்து தன் பார்வையைத் திருப்பாமல் அதே தீவிரத்துடன் பார்ப்பதும் வீடியோவில் தெளிவாகக் காணப்படுகிறது. சில வினாடிகளிலேயே அந்த மருத்துவர் ஊசி போடுவதை முடித்துவிட்டார்.

அங்கிருந்த சக நோயாளிகளின் ஸ்மார்ட்போனில் பதிவு செய்யப்பட்ட இந்தக் கியூட் வீடியோ, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டவுடன் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவை இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பகிர்ந்துள்ளனர்.

பல சமூக ஊடகப் பயனர்கள், இந்த வீடியோவை ‘சிங்கிள்ஸ்’ (Singles) மீது மீம்ஸ் போடுவதற்குப் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு பயனர், “இதே நிலைமையில் நானும் இருந்திருந்தால், இதே வேலையைத்தான் செய்திருப்பேன்,” என்று கமெண்ட் செய்துள்ளது குறும்பையும், நகைச்சுவையையும் ஏற்படுத்தியுள்ளது.