உத்தரபிரதேசம், தேவ்ப்ரியா மாவட்டம் சாலேம்பூரில் நடந்த மனதை உருக்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நோயால் வாடும் மகளை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற தந்தை, போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கியதால், மடியில் தூக்கி வைத்து கால்நடையாக ஓடினார். மகளை உயிருடன் காப்பாற்றும் துடிப்பில், அவர் கூட்ட நெரிசலை தாண்டி ஓடும் காட்சி இதயத்தை பதறச் செய்துள்ளது.
जाम में फंसी एम्बुलेंस, बेटी को लेकर दौड़ पड़ा शख्स
◆ उत्तर प्रदेश के देवरिया जिले का वीडियो हो रहा वायरल
◆ परिवार के लोग लड़की को इलाज के लिए सीएचसी सलेमपुर ले जा रहे थे#UttarPradesh | UP Deoria Ambulance pic.twitter.com/uqb8Ljc1YY
— News24 (@news24tvchannel) November 4, 2025
தகவலின்படி, சாலேம்பூர் தாலுகா மதவ்பூர் பகுதியைச் சேர்ந்த சுவாமிநாத் என்ற நபர், தனது 20 வயது மகள் பிங்கி குமாரியை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் மண்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் நகர முடியாமல் சிக்கியது. இதனால் மகளின் நிலை மோசமடைந்தது. பதற்றம் அடைந்த தந்தை, ஆம்புலன்ஸிலிருந்து இறங்கி மகளை கையில் தூக்கி, சாலையில் ஓடத் தொடங்கினார். சில தூரம் சென்றவுடன் ஒரு ஆட்டோ கிடைத்ததால், அதில் வைத்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்.
இந்த சம்பவம் சாலேம்பூர் ஸ்டேஷன் ரோடு சந்தையில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வியாபாரிகள் தங்கள் வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் பல ஆம்புலன்ஸ்களும் அந்த நாளில் சிக்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து, போலீசார் தாமதமாகவே சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையை பரிசோதித்தனர்.
