தில்லி இருதயநோய் நிபுணர் டாக்டர் சைலேஷ் சிங், துரித உணவுப் பழக்கத்திற்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளார். ₹20 மதிப்புள்ள ஒரு சமோசாவைத் தொடர்ந்து 15 ஆண்டுகள் சாப்பிட்டால், அது இறுதியில் ₹3 லட்சம் செலவில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையாக மாறும் என்று கூறுகிறார். துரித உணவு என்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு எதிராக அதிக வட்டிக்குக் கடன் வாங்குவது போல என்கிறார்.
சமோசா போன்ற துரித உணவுகளில் டிரான்ஸ் ஃபேட், அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ளது. இவை ரத்தத்தில் ‘கெட்ட கொலஸ்ட்ராலின்’ (LDL) அளவை அதிகரித்து, ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்துகின்றன. மேலும், உடல் உழைப்பின்மை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் ஆகியவை உயர் ரத்த அழுத்தம் மற்றும் பிற இதய நோய்களுக்கு முக்கியக் காரணமாகின்றன.
Office canteen samosa: ₹20
Angioplasty: ₹3 lakhsSamosas per year: 300
Years of eating: 15
Total samosa cost: ₹90,000You're not saving money on unhealthy food.
You're taking a loan against your arteries at 400% interest.— Dr Shailesh Singh (@drShaileshSingh) October 23, 2025
பழக்கங்களை மாற்றுவது முதலில் கடினம்தான். ஆனால், அந்தச் சிரமம் சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். நடைப்பயிற்சியைத் தவறவிடுவதால் வரும் வருத்தம் நிரந்தரமானது. எனவே, ஆரம்ப கால அசௌகரியத்தைத் தாண்டி, ஆரோக்கியமான பழக்கங்களை மேற்கொள்ளுங்கள் என்று டாக்டர் சிங் வலியுறுத்துகிறார்.
