புர்காராம், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள நாகூர் பகுதியைச் சேர்ந்த 42 வயது நபர். இவர் அரிய ஹைப்பர்சொம்னியா நோயால் (Axis Hypersomnia) பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக, ஒரு வருடத்தில் 300 நாட்களுக்கு மேல் தூங்கிக் கழிக்கிறார். 23 ஆண்டுகளுக்கு முன்பு இந்நோய் தொடங்கியது. தூங்கும் போது 25 நாட்கள் வரை தொடர்ந்து தூங்குவதால், உள்ளூர் மக்கள் அவரை ‘நவீன கும்பகர்ணன்’ என்று அழைக்கின்றனர். அவர் நடத்தும் சிறிய மளிகைக் கடையை மாதத்தில் வெறும் 5 நாட்கள் மட்டுமே திறந்து நடத்த முடிகிறது.
தூங்கும் காலங்களில் புர்காராமை எழுப்புவது மிகவும் கடினம். அப்போது அவரது மனைவி மற்றும் தாயார், உணவு ஊட்டுதல், குளிப்பாட்டுதல், கழிப்பறை உதவி போன்ற அனைத்தையும் தூக்கத்தில் இருக்கும் நிலையிலேயே செய்கின்றனர். அதிக தூக்கத்திற்குப் பிறகும் அவர் சோர்வு மற்றும் கடுமையான தலைவலியால் அலைந்தால், கடந்த சில ஆண்டுகளில் நிலை மோசமடைந்துள்ளது. ஆனாலும், குடும்பம் அவருக்கு துணையாக நிற்கிறது. மருத்துவர்கள் இந்நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், ஒரு நாள் அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார் என்ற நம்பிக்கையுடன் குடும்பத்தினர் உள்ளனர்
