ஹரியானாவின் சோனிபட்டில், தீபாவளியை முன்னிட்டு ஊழியர்கள் எதிர்பார்த்ததைவிட விசித்திரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கன்னௌர் பகுதிக்குரிய ஒரு நிறுவனத்தில் ஊழியர்கள் தீபாவளி போனஸை உறுதியுடன் எதிர்பார்த்தனர்.

ஆனால், போனஸுக்கு பதிலாக, அவர்களுக்கு சன் பாப்டி பெட்டி வழங்கப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் கோபமடைந்தனர். அவர்கள் பெட்டியை நிறுவனத்தின்  பிரதான வாயிலில் வைத்துவிட்டு, தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.

 

சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில்வைரலாகி, நெட்டிசன்கள் தொழிற்சாலை உரிமையாளர் மீது தங்கள் எதிர்ப்பையும் கருத்தையும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.