ஒரு காலத்தில் அம்மாக்களுக்கு ஸ்மார்ட்போன் என்றால் அழைப்பும், எஸ்எம்எஸ்ஸும் தான் தெரிந்தது. ஆனால் இன்றைய அம்மாக்கள் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக் என எங்கு பார்த்தாலும் அவர்களின் ரீல்கள், மீம்ஸ்கள் கலக்கிக்கொண்டே இருக்கிறது. புதுப் பாடல்களுக்கு ரீல் எடுக்கவும், மீம்ஸ்களை லைக் பண்ணவும் இப்போ இவர்கள் தான் முன் வரிசையில் இருக்கிறார்கள்.
Called my mom “bro” once in a text. She’s been bro-zoning me ever since
byu/jetha_weds_babita inindiasocial
சமீபத்தில், இப்படி ஒரு ‘கூல் அம்மா’ பற்றிய சாட் தான் வைரலாகி சமூக வலைதளங்களில் சிரிப்பு வெள்ளம் பாய வைக்கிறது. ஒரு பெண் ரெடிட்டில் பகிர்ந்துள்ள சாட் ஸ்கிரீன்ஷாட் தான் இதற்கு காரணம். தனது அம்மாவுடன் பேசும்போது “ப்ரோ” என்று கிண்டலாக கூறிய மகளுக்கு, அம்மா அந்த வார்த்தையையே பிடித்து கொண்டார்.
அதன் பிறகு, ஒவ்வொரு மெசேஜிலும் “ப்ரோ” சேர்க்க மறக்கவே இல்லை! மகள் “எனக்கு தூக்கம் வருது அம்மா, போய்ட்டு படுக்குறேன்” எனச் சொன்னபோது, அம்மா “இவ்வளவு சீக்கிரம் தூங்குற? ரிலாக்ஸ் ப்ரோ!” என பதில் அனுப்பியிருக்கிறார். அந்த ஒரு வரி இணையத்தை குலுக்கி விட்டது.
“இப்படி ஸ்டைலாக பேசுற அம்மா எங்க!” என்று நெட்டிசன்கள் ஆச்சரியப்படுகிறார்கள். மேலும், மகள் அனுப்பிய எமோஜிகளையும் காபி பண்ணி அனுப்பியிருப்பது பலரின் இதயத்தையும் உருக்கி விட்டது. இதன் மூலம் அந்த அம்மா, தன் மகளைத் தன் தோழியாகவே பார்க்க விரும்புகிறாரென்பது தெளிவாகிறது.
“மகளோட ஸ்லேங்க் கூட கற்றுக்கிட்ட அம்மா தான் ரியல் ப்ரோ!” என்று நெட்டிசன்கள் கமெண்ட் பண்ணி பாராட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களில் இந்த ‘அம்மா-மகள் ப்ரோ சாட்’ இப்போது வைரல் சென்சேஷனாக மாறியுள்ளது.
