ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநில வடபகுதியில் டிரையாத்லான் வீரர் மேத்யூ ஹவுசர் தனது சைக்கிள் பயணத்தின் போது மேக்பை என்ற பறவையின் தாக்குதலுக்கு உள்ளானார். அந்த பறவை அவரை மீண்டும் மீண்டும் தாக்கியதில் காதின் பின்புறம் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அவர் தன் கேமராவில் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/DP5CYXfDses/?igsh=MWlxbHl3a203ZjFzdQ%3D%3D#
டல்குயிகன் பகுதியில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த ஹவுசரிடம், தன் கூடு அருகே வந்துவிட்டதாக நினைத்த மேக்பை பறவை திடீரென பாய்ந்து தாக்கியது. இது ஆஸ்திரேலியாவில் வசந்த கால இனப்பெருக்க சீசனான செப்டம்பர் முதல் நவம்பர் வரை பொதுவாக நடக்கும் ‘ஸ்வூப்பிங்’ எனப்படும் பாதுகாப்புத் தாக்குதலாகும். இந்த பறவைகள் தங்கள் குட்டிகளை பாதுகாக்கும் நோக்கில் மனிதர்களையும், விலங்குகளையும் அச்சுறுத்துவதாக வனவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு ஹவுசர், “இது மிகவும் திடீர் மற்றும் வலி மிகுந்த அனுபவம். இதேபோன்ற பகுதிகளில் செல்லும் போது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என கூறினார். நியூ சவுத் வேல்ஸ் மாநில அதிகாரிகள் ஏற்கனவே மக்கள் மீது மேக்பை தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்து, ஹெல்மெட்டில் ‘ஜிப் டை’ பொருத்தவும், கூடு அமைந்த பகுதிகளை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
ஹவுசரின் வீடியோ வைரலாகியுள்ள நிலையில், பலர் இதுபோன்ற அனுபவங்களை பகிர்ந்து, சிலர் நகைச்சுவையாக “இப்படி தாக்கும் போது புது ‘இயர்ரிங்’ வாங்க வேண்டிய அவசியமே இல்லை!” என கருத்து தெரிவித்துள்ளார்.
