நியாயம் வழங்க வேண்டிய உயரிய பதவியில் உள்ள ஒரு ஜட்ஜ், தனது பதவிக்கு பெரும் அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இணைய வழி வழக்குகள் நடைபெறும் வேளையில், குறித்த ஜட்ஜ் வீடியோ கால் மூலமாக நீதிமன்றத்தில் பங்கேற்றிருந்தார்.

 

ஆனால் தன்னுடைய லாப்டாப்பில் வீடியோ மோட் செயலிழக்கப்படவில்லை என்பதை மறந்து விட்டார். இதன் காரணமாக, அவர் ஒருவருடனான அநாகரீக ராசலீலை நேரடியாக ஒளிபரப்பாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

வீடியோவில், அந்த ஜட்ஜ் தன்னை ஒரு பெண்ணின் அருகில் இழுத்து, முத்தம் கொடுக்கும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேரில் உள்ள மற்ற வழக்குரைஞர்களுக்கும், போலீசாருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை சிலர் உடனே தொடர்புகொண்டு எச்சரித்தனர் என்றாலும், வீடியோவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கி விட்டன.

இந்த வீடியோவில் உள்ள காட்சிகள், அந்த ஜட்ஜின் தனிப்பட்ட செயலை மட்டுமல்லாது, நீதித்துறையின் மதிப்பையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “நீதிமன்றமே இப்படி நடந்துகொண்டால் நியாயத்தை எங்கே தேட போவது?” என சிலர் கேள்வியெழுப்ப, மற்றொருவர், “நீதி மன்றத்தை தியேட்டராக மாற்றியிருக்கிறார் போல” என கிண்டலாக எழுதினர்.

இச்சம்பவம் எங்கு நடந்தது என்பது தெளிவாக தெரியாத நிலையில், வீடியோவை பலரும் பகிர்ந்து, விவாதித்து வருகின்றனர். இது போன்ற செயல், மற்ற நீதிமன்ற அதிகாரிகளின் மீதான நம்பிக்கையையும் பாதிக்கக் கூடியதாக இருப்பது கவலையை ஏற்படுத்துகிறது.