சமூக ஊடகங்களில் தினமும் பல விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவற்றில் சில உண்மையானவையாகவும், சில செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டவையாகவும் இருக்கும். சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில், ஒரு காட்டில் உள்ள சிறிய ஏரியில் மீன்களும் தவளைகளும் நீந்திக் கொண்டிருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. திடீரென ஒரு நாகப்பாம்பு தண்ணீருக்குள் நுழையும் காட்சி அதில் காணப்படுகிறது. பாம்பை பார்த்தவுடன், மீனும் தவளையும் “இறந்தது போல்” நடித்து அசைவின்றி கிடப்பதைக் காண முடிகிறது.
View this post on Instagram
வீடியோவில் பாம்பு சில நொடிகள் அவற்றை கவனித்து, பின்னர் அங்கிருந்து விலகிச் செல்கிறது. இதனால் பாம்பின் பிடியில் இருந்து தப்பியதாக அந்தக் காட்சியில் காட்டப்படுகிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. பலர் இதை இயற்கை நிகழ்வாக நம்பி பகிர்ந்துள்ளனர். ஆனால் வனவிலங்கு நிபுணர்கள் மற்றும் இணையப் பயனர்கள் சிலர், “இது செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட AI வீடியோ” என குறிப்பிடுகின்றனர்.
சிலர் இதனை “மிக அழகான கற்பனைப் படைப்பு” எனக் கூற, மற்றவர்கள் “இது போலி காட்சி; இதை உண்மையாக நம்ப வேண்டாம்” என எச்சரித்து வருகின்றனர். மேலும் சமீப காலமாக, பாம்புகள் மற்றும் விலங்குகள் தொடர்பான பல AI உருவாக்கப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. நிபுணர்கள், “இத்தகைய AI வீடியோக்கள் உண்மையென நம்பி தவறாகப் பரப்ப வேண்டாம்” என வலியுறுத்தியுள்ளனர்.
