கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தவெகப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜேப்பியார் கல்வி நிறுவனங்களின் தலைவர் மரிய வில்சன் வெளியிட்டுள்ள தகவலின்படி, உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை, தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பலியானோரின் வாரிசுகளின் கல்வி செலவுகள் அனைத்தையும் ஜேப்பியார் கல்வி நிறுவனமே முழுமையாக ஏற்கும் எனவும் மரிய வில்சன் அறிவித்துள்ளார். இது குறித்து தவெகத் தலைவர் விஜய், இம்முன்னதாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசு மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையிலாக, இந்த தனிப்பட்ட முயற்சி, துயரத்தில் உள்ள குடும்பங்களுக்கு நேரடியான நிவாரணமாக அமையும் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது
