கரூர் துயர வழக்கில் உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது கரூரில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டது. அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்திருந்தார்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு மற்றும் ஒரு நபர் விசாரணை ஆணையம் இரண்டையும் சஸ்பெண்ட் செய்துள்ளது. இருவிசாரணை குழுக்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில் அவ்விரு குழுக்களும் ஆய்வு செய்த விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் மாதந்தோறும் சிபிஐ இந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளதோடு ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவையும் விசாரணையை மேற்பார்வை செய்வதற்காக அமைத்துள்ளது.
