சில நாட்களுக்கு முன்பு, வி.சி.க தலைவர் திருமாவளவன் பயணித்த கார் ஒரு ஸ்கூட்டியை மோதிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நிகழ்வைத் தொடர்ந்து பொதுமேடையில் பேசிய திருமாவளவன், “ஏன் திருமாவளவன் காரிலிருந்து இறங்கி தடுக்கவில்லை என்று கேட்கிறார்கள்; இதே கேள்வியை எடப்பாடி பழனிச்சாமி மீது நடந்திருந்தால் கேட்டிருப்பார்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், “எனது பாதுகாப்பு குறித்து யாரும் கவலைப்படவில்லை; யாரையும் தாக்கவில்லை, வெறும் நாலு தட்டு தட்டினார்கள். முறைத்துப் பார்த்ததால் தான் அவர்கள் தாக்கினர். அதில் சாதி, மத காரணம் அல்ல” எனத் தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான சாட்டை துறைமுருகன் கடுமையாக எதிர்வினை தெரிவித்துள்ளார். “முறைத்து பார்த்தால் அடிப்பாராம்; திருமாவளவன் பாக்குறவனை அடிக்க உத்தரவிடுவது பண்ணையார் மனநிலைதான்,” என அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், “ஒரு அரசியல்வாதி மக்கள் மீது இப்படிப்பட்ட அணுகுமுறையைக் காட்டுவது ஏற்க முடியாதது” என நெட்டிசன்கள் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“>