புதுச்சேரியில் பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக கல்லூரி மாணவர்கள் நள்ளிரவில் போராட்டம் நடத்திய நிலையில் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருமணம் செய்வதாக கூறி பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி ஒருவர் புகார் கொடுத்தார். ஆனால் பாலியல் புகாரை மூடி மறைக்க கல்லூரி நிர்வாகம் முயற்சி செய்வதாக கூறி கல்லூரி மாணவர்கள் நள்ளிரவில் போராட்டம் நடத்திய நிலையில் போராட்டத்தை கைவிடும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் மத்திய பல்கலைக்கழகத்தில் நடந்த இந்தப் போராட்டத்தின் போது நள்ளிரவில் போலீஸார் மாணவர்கள் மீது தடியடி நடத்தியதோடு அவர்களை கைது செய்தனர். பாலியல் புகார் கொடுத்த பேராசிரியர்களை கைது செய்ய வேண்டும் என துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மாணவ மாணவிகளை போலீசார் வடுகட்டாயமாக தடியடி நடத்தி கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
பாலி*ல் புகார் அளிக்க வந்த மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார்.. பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நள்ளிரவு வரை போராட்டம் செய்தவர்கள் கைது#Puducherry | #University | #Students | #Protest | #Police | #PolimerNews pic.twitter.com/shdMgPZ1kn
— Polimer News (@polimernews) October 10, 2025
