ஒடிசா மாநிலத்தில் ஜஜ்பூர் மாவட்டத்தின் பஞ்சர்பூரின் கண்டியா கிராமத்தில் காரஸ்ரோட்டா ஆறு அமைந்துள்ளது. இங்கு சௌதாமினி (57) என்ற பெண்மணி குளித்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த ஆற்றில்  இருந்த முதலை ஒன்று வேகமாக வந்து அந்த பெண்ணை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது. இது தொடர்பாக தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

முன்னதாக கிராம மக்கள் அந்த முதலையை துரத்த முயற்சித்த போதிலும் அந்த பெண்ணை ஆழமான பகுதிக்குள் அது இழுத்து சென்றது. அந்த ஆற்றில் முதலைகள் இருப்பதால் மீட்பு பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.