தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக விசாரணை குழுக்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்துக்கள் பரப்ப அரசு தடை விதித்துள்ளது.

அதே நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக வெற்றிக்கழகத்திற்கு கரூர் சம்பவத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்ததால் நீதிபதி மீதும் சமூக வலைதளங்களில் அவதூறுகள் பரவ ஆரம்பித்தது. இதற்கு நீதிபதியும் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜன் என்பவரை இந்த சம்பவத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

அதாவது கரூர் சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்தை கடுமையாக விமர்சித்த இவர் விஜய்க்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டு இருந்தார். மேலும் நேதாஜி மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வரும் இவர் நீதிபதியை விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்ததால் தற்போது போலீசார் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.